< Back
சினிமா செய்திகள்
2 புதிய படங்களில் ஆர்.ஜே.பாலாஜி
சினிமா செய்திகள்

2 புதிய படங்களில் ஆர்.ஜே.பாலாஜி

தினத்தந்தி
|
17 Feb 2023 1:01 AM GMT

ஆர்.ஜே.பாலாஜி 2 புதிய படங்களில் நடிக்கிறார்.

தமிழில் எல்.கே.ஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ரன் பேபி ரன் என்ற திகில் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது மேலும் 2 புதிய படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்துக்கு சிங்கப்பூர் சலூன் என்று பெயர் வைத்துள்ளனர். இன்னொரு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது "நான் இதற்கு முன்பு நடித்த 3 படங்கள் மாதிரி ஒரே மாதிரியான படங்களில் நடிக்க வேண்டாம் என்று இருந்தபோது ஜியன் கிருஷ்ணகுமார் சொன்ன ரன் பேபி ரன் திகில் கதை பிடித்துப்போய் நடித்தேன். திகில் கதையில் நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

காமெடியாக கத்தி பேசுவது சுலபம். ஆனால் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது கஷ்டம். நிறைய நடிகர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்றைய சூழலில் படங்களை விளம்பரப்படுத்துவது முக்கியம். அதேசமயம் நல்ல கதையம்சம் உள்ள படமாகவும் இருக்க வேண்டும். நல்ல கதையாக இருந்தால்தான் விளம்பரம் உதவும் இல்லை என்றால் உதவாது'' என்றார்.

மேலும் செய்திகள்