'24 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கனவு நிறைவேறியது,' - ரிஷப் ஷெட்டியின் பதிவு வைரல்
|நடிகர் ரிஷப் ஷெட்டி, விக்ரம் உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி, விக்ரம் உடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், "ஒரு நடிகராக என் திரை வாழ்வில் விக்ரம் சார் எப்போதுமே எனக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். 24 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அவரை சந்தித்தது, அதிர்ஷ்டசாலியாக என்னை உணர வைக்கிறது, என்னைப் போன்ற நடிகர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. தங்கலான் வெற்றியடைய வாழ்த்துகள். கனவு நிறைவேறியது," இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரிஷப் 'காந்தாரா: அத்தியாயம் 1' பட பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.