< Back
சினிமா செய்திகள்
ஸ்வீட்ஹார்ட் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜ்!
சினிமா செய்திகள்

'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜ்!

தினத்தந்தி
|
5 Aug 2024 5:53 PM IST

ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரியோ ராஜ் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி அப்பொழுதே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர். 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரியோ ராஜ் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார்.

கடந்த ஆண்டு வெளியான ஜோ திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்த படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவாகும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதன் பின்னர் இந்த படத்தின் பெயர் குறித்த வீடியோவையும் பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ரியோ ராஜ் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்