'கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்த புரட்சி கலைஞன்' - நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ வைரல்...!
|தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். இதனையடுத்து விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்தின் உடல், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ: