வலைத்தளத்தில் விமர்சனம்; நடிகை சமந்தா வருத்தம்
|நடிகை சமந்தா வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவை பலரும் கேள்வி எழுப்பி சர்ச்சையாக்கினர்.
நடிகை சமந்தா ஓய்வு எடுத்து சுற்றுலா தொடங்கி உள்ளார். வலைத்தளத்தில் அவ்வப்போது கருத்துகள், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். சில நேரம் ரசிகர்கள் செயலால் சங்கடப்படவும் செய்கிறார்.
சமீபத்தில் சமந்தா வளர்த்து வந்த நாய் நாகசைதன்யாவிடம் இருப்பதை பார்த்த சிலர் மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களுக்கு அறிவு இல்லையா, வேலை இல்லாமல் இருக்கிறீர்களா. புத்தகம் படியுங்கள் அறிவு வளரும் என்றார்.
இந்த நிலையில் தற்போது வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்ட ஒரு பதிவு ஆர்வத்தை கிளப்பி உள்ளது. அதில், "கருணை குணத்தை ஒரு திட்டமாக அல்லாமல் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டுதலாக பழக்கப்படுத்திக்கொள்பவர்களுக்கு ஹேட்ஸ் ஆப்'' என்று குறிப்பிட்டு இருந்தார்
இதையடுத்து சமந்தா யாரை மனதில் வைத்து இந்த பதிவை வெளியிட்டார் என்று பலரும் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி சர்ச்சையாக்கினர். தனது கருத்து மீது வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள சமந்தா, "ஒரு நல்ல வார்த்தை சொன்னால் புரிந்து கொண்டு அதை அனுசரிக்க முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து அதில் கூட தவறான அர்த்தங்களை தேடுபவர்களை என்ன சொல்வது'' என்று வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.