< Back
சினிமா செய்திகள்
செல்ல கிளி - ரோமியோ படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'செல்ல கிளி' - ரோமியோ படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
21 Feb 2024 5:39 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'.

சென்னை,

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'. இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குட் டெவில் புரொடக்சன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், ரோமியோ படத்தின் 'செல்ல கிளி' என்ற முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் 'செல்ல கிளி' பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்