< Back
சினிமா செய்திகள்
சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
சினிமா செய்திகள்

சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
7 Feb 2023 6:31 PM IST

‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை,

சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் ஏற்கனவே இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, பிப்ரவரி 17-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் சமந்தாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்