< Back
சினிமா செய்திகள்
சுந்தர்.சி நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

சுந்தர்.சி நடித்துள்ள 'பட்டாம்பூச்சி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
14 Jun 2022 6:03 AM IST

நடிகர் சுந்தர்.சி நடித்துள்ள 'பட்டாம்பூச்சி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது 'பட்டாம்பூச்சி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார். பத்ரி நாராயணன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பட்டாம்பூச்சி திரைப்படத்தை அவ்னி டெலி மீடியா தயாரித்துள்ளது. நவ்நீத் இசையமைத்துள்ளார். இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைக்கோ திரில்லர் வகை கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ள பட்டாம்பூச்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பட்டாம்பூச்சி திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்