< Back
சினிமா செய்திகள்
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு
சினிமா செய்திகள்

அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
21 Feb 2023 2:37 PM IST

'பார்டர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் தள்ளிவைத்துள்ளது.

சென்னை,

இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் ரெஜினா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் வருகிற பிப்ரவரி 24-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து 'பார்டர்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அருண் விஜய்யின் 'பார்டர்' திரைப்படம் பிப்ரவரி 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலைகளால் வெளியிட முடியவில்லை. இந்த திரைப்படம் உங்கள் பொறுமைக்கு தகுதியானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும், இந்த படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் எனவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்