< Back
சினிமா செய்திகள்
இயக்குனர் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

இயக்குனர் அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Aug 2023 11:22 PM IST

‘உயிர் தமிழுக்கு’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா இயக்கி, தயாரித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இந்த படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். இந்நிலையில் 'உயிர் தமிழுக்கு' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் செப்டம்பர் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்