< Back
சினிமா செய்திகள்
அம்பானி இல்ல திருமண விழா: நடிகை ரேகாவுடன் சல்மான்கான் கைகோர்த்து சென்ற வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

அம்பானி இல்ல திருமண விழா: நடிகை ரேகாவுடன் சல்மான்கான் கைகோர்த்து சென்ற வீடியோ வைரல்

தினத்தந்தி
|
14 July 2024 9:43 PM IST

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மும்பை,

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருடைய திருமணம் பிரம்மாண்ட முறையில் அதிக பொருட்செலவிலும் நடத்தப்படுகிறது. இவருக்கும் தொழிலதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சென்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் கடந்த 12-ந் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் டோனி, மல்யுத்த வீரர் ஜான் சீனா, ஹாலிவுட் நடிகர் நடிகைகள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பாரம்பரிய புடவையில் வந்த நடிகை ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுடன் பேசி மகிழ்ந்தார். இந்தநிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா உள்ள நுழையும் போது நடிகர் சல்மான் கான் அவரை வரவேற்றார். பின்னர் அவரது கையை பிடித்து கொண்டு இருவரும் ஒன்றாக உலா வந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு நடனம் ஆடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

மேலும் செய்திகள்