< Back
சினிமா செய்திகள்
கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க கூட தயார்- ரேகா நாயர்
சினிமா செய்திகள்

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க கூட தயார்- ரேகா நாயர்

தினத்தந்தி
|
24 July 2022 2:33 PM IST

நடிகை ரேகா நாயர் கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

பார்த்திபன் நடித்து, இயக்கி சமீபத்தில் வெளியான படம் 'இரவின் நிழல்'. இதில் ராணி என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார். அரை நிர்வாணத்துடன் அவர் நடித்த காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. இதற்காக சமூக வலைதளங்களில் அவருக்கு ஒருபுறம் பாராட்டுகளும், மறுபுறம் விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன.

இதுகுறித்து ரேகா நாயர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

''ஒரு கலையை கலையாக தான் பார்க்க வேண்டும். நான் 'இரவின் நிழல்' படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததால் எந்த அளவுக்கு பாராட்டுகள் கிடைத்ததோ, அதே அளவுக்கு விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என பலரும் விமர்சிக்கிறார்கள்.

எனக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன்.

ஒரு பிச்சைக்காரியாகவோ, விபசாரியாகவோ எதுவாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பேன். மேலும் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிக்க தயார்''.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்