< Back
சினிமா செய்திகள்
நடிகரை காதலிக்கும் ரெஜினா?
சினிமா செய்திகள்

நடிகரை காதலிக்கும் ரெஜினா?

தினத்தந்தி
|
15 Dec 2022 7:29 AM IST

சந்தீப் கிஷன் ரெஜினாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதை வைத்தே இருவரும் காதலிப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தில் அறிமுகமாகி கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன். சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு 32 வயது ஆகிறது.

இந்த நிலையில் ரெஜினாவுக்கு நடிகர் சந்தீப் கிஷனுடன் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியாகி உள்ளது. இருவரும் தமிழில் 'மாநகரம்' படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். ரெஜினா தற்போது தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதோடு இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதை வைத்தே இருவரும் காதலிப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை அவர்கள் இதுவரை மறுக்கவில்லை.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ், நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுசுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்