< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திரையரங்கில் டிக்கெட் கட்டணங்களை குறைக்க வேண்டும் - தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை
|13 Feb 2024 12:00 PM IST
திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு 80 - 100 ரூபாய் எனவும், மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 120 - 150 ரூபாய் எனவும் கட்டணத்தை மாற்ற வேண்டும். சென்னை, மதுரையில் ரூ.100 மட்டுமே வசூலிக்க வேண்டும் . திருச்சி, கோவை, சேலம் தவிர்த்த மற்ற நகரங்களில் அதிகபட்சம் ரூ.80 கட்டணம் நிர்ணயிக்கலாம். வரும் 23-ம் தேதி முதல் வெளியாகும் படங்களுக்கு டிக்கெட் விலையை குறைவாக நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறு பட்ஜெட் படங்களை திரையரங்கிற்கு வந்து மக்கள் பார்ப்பதை இலகுவாக்கும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.