< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
துணிவை தொடர்ந்து வாரிசு படத்தின் விநியோக உரிமையையும் வாங்கிய ரெட் ஜெயன்ட்...!
|17 Dec 2022 12:13 PM IST
துணிவை தொடர்ந்து வாரிசு படத்தின் திரையரங்கு விநியோக உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய்யின் 66-வது படமான வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை ஐதராபாத்தை தலைமையாக கொண்டு ஸ்ரீ வெங்கடேஷ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 17 ஸ்டுடியோ என்ற நிறுவனம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு உள்ளிட்ட 4 இடங்களில் வாரிசு திரைப்படத்தை வெளியிடும் உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் துணிவு படத்தை ரெட் ஜெய்ன்ட நிறுவனம் தமிழகம் முழுவரும் வெளியிடுகிறது. தற்போது தமிழகத்தின் முக்கிய 4 இடங்களில் வாரிசு படத்தின் நியோக உரிமையையும் ரெட் ஜெயன்ட் பெற்றுள்ளது.