< Back
சினிமா செய்திகள்
ராயன் : 500 கலைஞர்களுடன் பிரபுதேவா பிரமாண்ட நடனம்
சினிமா செய்திகள்

ராயன் : 500 கலைஞர்களுடன் பிரபுதேவா பிரமாண்ட நடனம்

தினத்தந்தி
|
21 April 2024 3:47 PM IST

ராயன் படத்தின் "பர்ஸ்ட் சிங்கிள்" பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இதில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பிரபுதேவாவுடன் நடனமாடி உள்ளனர்.

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் தேர்தலுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் மற்றும் செல்வராகவன், தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யா, தனுஷ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷான் இந்த மூன்று காம்போவில் எந்த காம்போவுக்கு மரண வெயிட்டிங் என பதிவு செய்தது. துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

'ராயன்' திரைப்படத்தை ஜூன் 7-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் "பர்ஸ்ட் சிங்கிள்" குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷின் கேரக்டர் பெயர் 'காத்தவராயன்'.இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'பர்ஸ்ட் சிங்கிள் 'மே' மாதம் 2 - வது வாரம் வெளியாக உள்ளது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார். இதில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பிரபுதேவாவுடன் நடனமாடி உள்ளனர்

மேலும் செய்திகள்