வட்டார வழக்கு பேசும் ரவீனா ரவி
|கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டோனி ஷார்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே. கணேசன் வழங்கும் புதிய படத்தை இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்துள்ளனர். டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள 'வட்டார வழக்கு' திரைப்படம் வட்டார கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும்.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் சினிமா காணாத காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல், காதலர்கள் நேரிலும் சந்திக்காமல் மலர்ந்த புதுவிதமான காதல் உணர்வை காட்டும் வெளிப்படுத்தும் வகையில், இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாதம் வரும் டிசம்பர் 29 - ஆம் தேதி இத்திரைப்படம் சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனத்தால் பெருமையுடன் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு மூடர் கூடம் டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை வெங்கட்ராஜன் செய்திருக்கிறார்.