< Back
சினிமா செய்திகள்
ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகளை வென்ற இராவண கோட்டம்
சினிமா செய்திகள்

ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகளை வென்ற 'இராவண கோட்டம்'

தினத்தந்தி
|
8 Jun 2023 2:48 AM IST

ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

ஜெய்பூர்,

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவான் 'இராவண கோட்டம்' திரைப்படம், கடந்த மே 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'இராவண கோட்டம்' திரைப்படம் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இதனை நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்