< Back
சினிமா செய்திகள்
ரத்னம் படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
28 March 2024 10:13 PM IST

'ரத்னம்' படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்

சென்னை,

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்'என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

.இந்நிலையில் படத்தின் 2வது பாடல் நாளை வெளியிடப்படும் என தயாரிப்பு குழு அறிவித்து உள்ளது. இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்