< Back
சினிமா செய்திகள்
ரத்தமாரே - ஜெயிலர் படத்தின் புதிய பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

'ரத்தமாரே' - 'ஜெயிலர்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
5 Aug 2023 6:50 PM IST

'ஜெயிலர்' திரைப்படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. ஏற்கெனவே 'ஜெயிலர்' படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 'ரத்தமாரே' என்ற புதிய பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதன்படி 'ரத்தமாரே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்