< Back
சினிமா செய்திகள்
மீண்டும் விடுமுறையை விஜய் தேவரகொண்டாவுடன் கொண்டாடுகிறாரா ராஷ்மிகா மந்தனா?
சினிமா செய்திகள்

மீண்டும் விடுமுறையை விஜய் தேவரகொண்டாவுடன் கொண்டாடுகிறாரா ராஷ்மிகா மந்தனா?

தினத்தந்தி
|
5 April 2024 8:31 AM IST

ராஷ்மிகா மந்தனா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

மும்பை,

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் தற்போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்தார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது மிருணாளுடன் நடித்துள்ள பேமிலி ஸ்டார் படம் இன்று வெளியாகிறது.

ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகி விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். புஷ்பா படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் முன்னதாக வெளியான டியர் காம்ரேட் மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். அதிலிருந்து இருவருக்குமிடையேயான உறவு குறித்து இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவர் மாலத்தீவு சென்றிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கு எடுத்த மயில் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவருக்கு பின் பகுதியில் ஒரு மயிலும் இருந்தது. இதனை கண்ட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக மாலத்தீவு சென்று விடுமுறையை கொண்டாடுகின்றனர் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்