< Back
சினிமா செய்திகள்
வெளிச்சத்திற்கு வந்த காதல்...! விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு செல்லும் ராஷ்மிகா...!
சினிமா செய்திகள்

வெளிச்சத்திற்கு வந்த காதல்...! விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு செல்லும் ராஷ்மிகா...!

தினத்தந்தி
|
8 Oct 2022 11:09 AM IST

ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

சென்னை

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா இப்போது வாரிசு படத்தில் விஜய் ஜோடியாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படமும் வசூலைவாரிக்குவித்தது.

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கியகாரணம்.

டியர் காம்ரேட் படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடிக்கும் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் ஒரு லிப் லாக் காட்சியும் அட்டகாசமாக இடம் பெற்று இருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வருகின்றனர்.

என்னத்தான் லவ் இல்லை என இவர்கள் கூறினாலும், அடிக்கடி இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில், இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்னனர்.

ராஷ்மிகா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விமான நிலையத்திற்குள் காணப்பட்டார்.

ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

தனது காதல் குறித்து ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''எனது வாழ்க்கை வெளிப்படையானது. எனது முன்னாள் காதலர்களை இப்போதும் நான் நல்ல நண்பர்களாகவே பார்க்கிறேன். அவர்களின் தற்போதைய மனைவிமார்களை சந்திக்க எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. முன்னாள் காதலர்களுடன் சுமுக நட்பில் இருப்பது நல்ல லட்சணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் யாருக்கும் விரோதியாக இருக்க மாட்டேன். என்னையும் நடிகர் விஜய் தேவரகொண்டாவையும் இணைத்து பேசுவதை மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.




மேலும் செய்திகள்