விஜய் தேவரகொண்டாவின் சகோதரருக்கு புஷ்பா ஸ்டெப்பை கற்றுக்கொடுத்த ராஷ்மிகா
|நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு , புஷ்பா 2 படத்தின் 'சூசெகி' பாடலின் ஸ்டெப்பை கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐதராபாத்,
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் ஐதராபாத்தில், நடந்த கம் கம் கனேஷா படவிழாவில் கலந்துகொண்டார். இப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரராவார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு , புஷ்பா 2 படத்தின் 'சூசெகி' பாடலின் ஸ்டெப்பை கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ராஷ்மிகா, ஆனந்த் தேவரகொண்டாவிடம் புஷ்பா 2 படத்தின் 'சூசெகி' பாடலின் புரோமோவை பார்த்தீர்களா? என்று கேட்கிறார். பின்னர் அதில் வரும் ஸ்டெப்பை ராஷ்மிகா செய்ய செய்ய நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவும் அவரை பார்த்து திருப்பி செய்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூசெகி' நாளை காலை 11.07 மணிக்கு வெளியாக உள்ளது.