வைரலான ராஷ்மிகா மந்தனாவின் ஒர்க் அவுட் வீடியோ
|ராஷ்மிகா மந்தனா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், 'என்ன மாதிரி கடின உழைப்பு...பலருக்கு முன்னுதாரணம்' என்றும், மற்றொருவர் 'ஜிம்மில் ஒரு தொடக்கக்காரராக இந்த பயிற்சியை செய்ய எவ்வளவு மணி நேரம் ஆகும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதனை நீங்கள் எளிதாக செய்துள்ளீர்கள்' என்றும், வேறொருவர் 'இதனால்தான் இவர் இன்டர்நேஷனல் கிரஸ்' என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். அதனுடன் ' வலுவூட்டும் உடற்பயிற்சி செய்யும் நேரம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்', என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக 'அனிமல்' திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். அதில் இருவரும் ரொமான்ஸில் அசத்தி இருந்தனர். தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றன.'புஷ்பா 2' இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.