புஷ்பா 2 - சமூக வலைதளங்களில் கசிந்த ராஷ்மிகாவின் முதல் தோற்றம்... புகைப்படம் வைரல்
|நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திர தோற்றம் குறித்த முதல் புகைப்படம் கசிந்து உள்ளது.
மும்பை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றன.
இந்நிலையில், 'புஷ்பா2' படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திர தோற்றம் குறித்த முதல் புகைப்படம் கசிந்து உள்ளது.
அவ்வப்போது படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகர், நடிகைகளின் வீடியோகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். அதுபோல தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 'புஷ்பா 2' படத்தின் ஸ்ரீவள்ளி கதாபாத்திர தோற்றம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது.
அதில், சிவப்புநிற சேலை அணிந்து, நகைகள் போட்டுக்கொண்டு ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
'புஷ்பா 2' இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.