< Back
சினிமா செய்திகள்
கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ராஷ்மிகா
சினிமா செய்திகள்

கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ராஷ்மிகா

தினத்தந்தி
|
28 July 2022 4:19 PM IST

கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் எல்லாம் என்னை ஸ்ரீவள்ளி என்று அழைக்கும்போது, உண்மையில் ஏதோ சாதித்தேன் என்ற உணர்வு ஏற்படுகிறது என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தனது கனவு நிறைவேறியது குறித்து ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில். ''நடிகர்-நடிகைகள் யாராக இருந்தாலும் தமது படங்கள் நன்றாக ஓடவேண்டும் என்று ஆசைப்படுவது சகஜம். ஆனால் நான் மட்டும் சினிமா துறைக்கு வந்தபோது அனைத்து மொழிகளிலும் வெளியாகும் படத்தில் நடித்து இந்திய கதாநாயகியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். புஷ்பா படத்தில் எனது ஆசை நிறைவேறி கனவு பலித்தது. இப்போது தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என எங்கு சென்றாலும் கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் எல்லாம் என்னை ஸ்ரீவள்ளி என்று அழைக்கும்போது, உண்மையில் ஏதோ சாதித்தேன் என்ற உணர்வு ஏற்படுகிறது என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் எனது முக்கியமான கனவுகளில் ஒன்று. அதுவும் நிறைவேறிவிட்டது.

இந்தி படம் ஷூட்டிங்கின்போது என் பிறந்தநாள் விழாவை அமிதாப்பச்சனுடன் சேர்ந்து கொண்டாடினேன். இதைவிட இன்னும் என்ன வேண்டும் சொல்லுங்கள்" என்றார்.

மேலும் செய்திகள்