புஷ்பா - 2 சிறப்பு போஸ்டரை குண்டூர் காரம் மகேஷ் பாபு புகைப்படத்துடன் ஒப்பீடு
|நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா - 2 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது.
சென்னை,
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா, ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு, சீதா ராமம், குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். தொடர்ந்து புஷ்பா - 2, ரெயின்போ, தி கேர்ள் பிரண்ட், சாவா என படங்கள் நடித்து வருகிறார்.
இவர் நேற்று தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு புஷ்பா - 2 படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது. தற்போது இந்த போஸ்டரில் இருக்கும் ராஷ்மிகாவின் புகைப்படத்தை, முன்னதாக வெளியான குண்டூர் காரம் படத்தில் இருக்கும் மகேஷ் பாபுவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு இணையதளங்களில் சிலர் புகைப்படத்தை வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், அவ்வாறு வெளியான புகைப்படம் ஒன்றிற்கு ராஷ்மிகா மந்தனா கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஓ.... சிறப்பு..எனக்கு இது பிடித்திருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.