< Back
சினிமா செய்திகள்
இந்தியில் கவனம் செலுத்தும் ராஷ்மிகா
சினிமா செய்திகள்

இந்தியில் கவனம் செலுத்தும் ராஷ்மிகா

தினத்தந்தி
|
16 Jun 2022 6:32 PM IST

ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறார்.

தென் இந்திய கதாநாயகிகளுக்கு இந்தி படங்களில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பது கனவு. அது பல நடிகைகளுக்கு கைகூடுவது இல்லை. ஆனால் பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறார். இந்தி இயக்குனர்களிடம் கதைகளும் கேட்டு வருகிறார். தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ராஷ்மிகா, தற்போது விஜய்யின் 66-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் தயாராகி பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்த பிறகு ராஷ்மிகாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர். சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய 3 இந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் 2 படங்களில் நடிக்க பேசி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் தென் இந்திய நடிகைகள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.

மேலும் செய்திகள்