< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரல்
|17 July 2024 1:02 PM IST
ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சென்னை,
தமிழில், கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். பல மொழிகளில் வெளியான 'புஷ்பா' அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் 'குபேரா' படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் ராஷ்மிகா நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அழகான சிவப்பு ரோஜாக்களை தனது தலையில் வைத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.