< Back
சினிமா செய்திகள்
உருவக்கேலி செய்பவர்களை பார்த்தாலே...அனிமல் பட விமர்சனத்திற்கு ராஷ்மிகா பதிலடி
சினிமா செய்திகள்

உருவக்கேலி செய்பவர்களை பார்த்தாலே...அனிமல் பட விமர்சனத்திற்கு ராஷ்மிகா பதிலடி

தினத்தந்தி
|
6 April 2024 6:58 AM IST

உருவக்கேலி செய்கின்றவர்களை நான் கண்டுகொள்வது இல்லை என்று ராஷ்மிகா மந்தனா கூறினார்.

சென்னை,

தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்' இந்தி படம் சர்ச்சையில் சிக்கியது.

இந்த நிலையில் விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஷ்மிகா மந்தனா கூறும்போது, "பெண்களை சிலர் உருவக்கேலி செய்கின்றனர். இப்படிப்பட்டவர்களை நான் கண்டுகொள்வது இல்லை.

ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்' படம் வெற்றி பெற்றது. ஆனால் அந்த படத்தை பெரிய அளவில் விமர்சித்தனர். எனது கதாபாத்திரம் பற்றியும் அவதூறாக பேசினர். எனது முகம் நன்றாக இல்லை, நடிப்பு சரியில்லை, வசனங்கள் புரியவில்லை என்றெல்லாம் கேலி செய்தனர்.

பெண்கள் உடல் அமைப்பை வைத்து உருவக்கேலி செய்பவர்களை பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கும். அந்த படத்தில் நான் நடித்த குறிப்பிட்ட காட்சிக்கு படப்பிடிப்பு தளத்தில் பலரும் கைதட்டி பாராட்டினர். அந்த காட்சியைத்தான் தற்போது விமர்சிக்கின்றனர்.

எனது நடிப்பு எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது நடிப்பு பற்றி எனக்கு தெரியும். விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை'' என்றார்.

மேலும் செய்திகள்