< Back
சினிமா செய்திகள்
ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு வைரல்

தினத்தந்தி
|
21 Aug 2024 10:13 PM IST

ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அன்புள்ள டைரி' என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்தார். பல மொழிகளில் வெளியான 'புஷ்பா' படம் அவருக்கு திருப்புமுனை அமைந்தது. அதனைத்தொடர்ந்து, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 'அன்புள்ள டைரி' என்ற தலைப்பில் அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளார். அதாவது, ஒரு சில குறிப்பிட்ட விசயங்களை பதிவிட்டு இவை எல்லாமல் இல்லாமல் என் வாழ்க்கையில் எதும் செய்ய இயலாது என குறிப்பிட்டுள்ளார். அவைகள் நல்ல உணவு, சிரிப்பு, தூக்கம், புத்தகம் வாசித்தல், பயணம், காபி, நாய்குட்டி ஆரா மற்றும் வேலை உள்ளிட்ட சில குறிப்பிட்ட விசயங்களை செய்வது போல் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவைகள் தான் அவருக்கு தொடர்ந்து மகிழ்ச்சியை தருபவை என பதிவிட்டுள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இவர் தற்போது 'புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள் பிரண்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் 'குபேரா' படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் ராஷ்மிகா நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்