< Back
சினிமா செய்திகள்
தனுஷுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா
சினிமா செய்திகள்

தனுஷுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா

தினத்தந்தி
|
3 July 2024 9:00 PM IST

குபேரா படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா இணைய இருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

சென்னை,

விஜய் நடித்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு, இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் ராஷ்மிகா சல்மானுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், தனுஷுடன் முதல் முறையாக ராஷ்மிகா இணைந்து நடிக்க உள்ளார். சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் குபேரா. இந்த படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றம் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் பிரபலமடைந்த ராஷ்மிகா. குபேரா படத்தில் தனுஷுடன் இணைய இருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்