< Back
சினிமா செய்திகள்
மீண்டும் டீப் பேக் வீடியோவில் ராஷ்மிகா
சினிமா செய்திகள்

மீண்டும் டீப் பேக் வீடியோவில் ராஷ்மிகா

தினத்தந்தி
|
15 March 2024 9:05 AM IST

மீண்டும் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப டீப் பேக் ஆபாச போலி வீடியோக்கள் நடிகைகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் வலியுறுத்தி உள்ளனர்.

போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் அடங்கவில்லை. தொடர்ந்து டீப் பேக் ஆபாச வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் ஆபாச வீடியோ வெளியானது. இன்னொரு பெண் உடலோடு ராஷ்மிகாவின் முகத்தை ஒட்டி வெளியிட்டு இருந்தனர். தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, கஜோல், கத்ரினா கைப் போன்றோரின் டீப் பேக் வீடியோக்களும் வெளிவந்தன.

இப்போது மீண்டும் ராஷ்மிகாவின் ஆபாச டீப் பேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆபாசமாக நடனம் ஆடும் பெண்ணின் முகத்தை எடிட் செய்து ராஷ்மிகாவின் முகத்தை அதில் இணைத்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ராஷ்மிகாவும் இதனை கண்டித்துள்ளார்.

மேலும் செய்திகள்