சர்ச்சையில் ராஷ்மிகா
|தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படம் திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது ரன்பீர் கபூருடன் அனிமல் இந்தி படத்தில் நடித்து வருகிறார். விளம்பர படங்களிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள புதிய விளம்பர படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த விளம்பரத்தில் அசைவ உணவை சாப்பிடுவதுபோன்று போஸ் கொடுத்து இருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே அவர் தான் சைவ உணவுகளையே சாப்பிட்டு வருகிறேன். அசைவம் சாப்பிடுவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
இப்போது அசைவ உணவை சாப்பிடுவதுபோன்று விளம்பரப்படத்தில் நடித்துள்ளதால் வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராஷ்மிகாவை கடுமையாக கேலி செய்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
பணத்துக்காக அசைவ உணவுகளை விளம்பரம் செய்வீர்களா? சைவ உணவு தான் சாப்பிடுவேன் என்று சொன்னது பொய்யா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.