< Back
சினிமா செய்திகள்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ராஷ்மிகா
சினிமா செய்திகள்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ராஷ்மிகா

தினத்தந்தி
|
7 April 2023 10:54 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கு 'ரெயின்போ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் தேவ்மோகன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சாந்தரூபன் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் கதையாக இந்தப் படம் இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை இதில் பார்க்கலாம். புதுமையான கதைக்களம் கொண்ட படமாக உருவாகிறது'' என்றார்.

ராஷ்மிகா கூறும்போது, ``பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதன் முறையாக பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பொழுதுபோக்குடன் கூடிய ஆச்சரியப் படுத்தும் ஒரு படமாக இருக்கும்'' என்றார். தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரபு, இசை: ஜஸ்டின் பிரபாகர், ஒளிப்பதிவு: கே.எம்.பாஸ்கரன்.

மேலும் செய்திகள்