பெரிய பட்ஜெட் படத்தில் இருந்து ராஷ்மிகா நீக்கம்?
|புஷ்பா 2 படத்தில் இருந்து ராஷ்மிகாவை நீக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும், அவருக்கு பதிலாக பிரபல இந்தி நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக வள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் பெரிய வெற்றி பெற்றது. அடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தில் இருந்து ராஷ்மிகாவை நீக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும், அவருக்கு பதிலாக பிரபல இந்தி நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. புஷ்பா 2-ம் பாகத்தின் ஆரம்பத்திலேயே ராஷ்மிகா கொலை செய்வது போன்ற காட்சியை வைத்து தொடர்ந்து இன்னொரு பெண்ணுடன் அல்லு அர்ஜுனுக்கு காதல் மலர்வது போன்று திரைக்கதையை மாற்றி அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது ராஷ்மிகா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.