< Back
சினிமா செய்திகள்
சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ராஷ்மிகா
சினிமா செய்திகள்

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ராஷ்மிகா

தினத்தந்தி
|
24 Jun 2023 11:00 AM IST

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னட திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். புஷ்பா அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தற்போது இந்தியில் அனிமல் என்ற படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் ரெயின்போ என்ற படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் புஷ்பா 2-ம் பாகம் படமும் கைவசம் உள்ளது. மகேஷ்பாபு ஜோடியாக இன்னோரு தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் ராஷ்மிகா சினிமாவுக்கு வந்த தொடக்க காலத்தில் இருந்து தன்னிடம் மானேஜராக பணியாற்றி வந்தவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நானும், மானேஜரும் சுமுகமாகவே பேசி பிரிந்தோம். மோதல் எதுவும் இல்லை. இனிமேல் நாங்கள் இருவரும் சுதந்திரமாக வேலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம்.'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்