< Back
சினிமா செய்திகள்
சரித்திர கதையில் ராணியாக ராஷ்மிகா
சினிமா செய்திகள்

சரித்திர கதையில் ராணியாக ராஷ்மிகா

தினத்தந்தி
|
30 April 2023 9:10 AM IST

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக வந்தார். பல மொழிகளில் வெளியான புஷ்பா படம் அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்த நிலையில் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் ராஷ்மிகா மந்தனா ராணி வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி போம்ஸ்லே வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் சரித்திர படம் தயாராக உள்ளது. இதில் சம்பாஜி மன்னன் கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடிக்கிறார். அவரது மனைவி இயேசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிப்பதாக கூறப்படுகிறது. மன்னன் யுத்தங்களுக்கு செல்லும்போது மகாராணி இயேசுபாய் எத்தகைய அரசியல் முடிவுகள் எடுத்தார் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.

கதையை கேட்டதும் ராஷ்மிகாவுக்கு பிடித்துபோய் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லட்சுமன் உட்டேகர் இயக்குகிறார்.

படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

மேலும் செய்திகள்