< Back
சினிமா செய்திகள்
காதல் கதைகளை விரும்பும் ராஷிகன்னா
சினிமா செய்திகள்

காதல் கதைகளை விரும்பும் ராஷிகன்னா

தினத்தந்தி
|
29 March 2023 10:00 PM IST

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் படங்களில் நடித்து பிரபலமான ராஷிகன்னா இந்தி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். அடுத்து காதல் படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில் "காதல் கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். காதல் படங்கள் போரடிக்காது. எனக்கு வித்தியாசமான காதல் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. ஆஷிக்கி போன்ற மனதை உருக வைக்கும் காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதும் எனது நீண்ட கால கனவு.

சமீப காலமாக என்னிடம் நிறைய இயக்குனர்கள் காதல் கதைகள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த கதைகளில் கொஞ்சம் கூட புதுமையான விஷயங்கள் இல்லை. ஒரே மாதிரியாகவே இருந்தன. இதயத்தை தொடும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் அவர்கள் சொன்ன காதல் கதைகளில் இல்லை.

இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் காதல் கதைகளில் நடிக்க பொருத்தமான நடிகர். அவருடன் சேர்ந்து நடிக்கவும் விருப்பம் உள்ளது'' என்றார்.

மேலும் செய்திகள்