நிர்வாண போட்டோஷூட் : நடிகர் ரன்வீர் சிங்கிடம் 2 மணி நேரம் விசாரணை
|நிர்வாண போட்டோஷூட் சர்ச்சை தொடர்பாக மும்பை போலீசாரிடம் நடிகர் ரன்வீர் சிங் வாக்குமூலம் பதிவு செய்தார்.
மும்பை,
நிர்வாண போட்டோ ஷூட் சர்ச்சை தொடர்பாக மும்பை போலீசாரிடம் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் இன்று வாக்குமூலம் பதிவு செய்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரன்வீர் ஒரு பத்திரிகைக்காக நிர்வாண புகைப்படம் எடுத்தார். ரன்வீரின் போட்டோ ஷூட் படங்கள் ஜூலை 21 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இவரின் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவியது. தனது நிர்வாண படங்களின் மூலம் ரன்வீர் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி செம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஜூலை 26-ம் தேதி ரன்வீர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு, நிர்வாண புகைப்படம் எடுத்த வழக்கில், மும்பை காவல்துறையினரால் ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று ரன்வீர் சிங் போலீசில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
இன்று காலை 7 மணிக்கு செம்பூர் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் ஆஜரானார். அப்போது, அவரிடம் விசாரணை நடத்தி, பதில் பதிவு செய்யும் பணி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.