காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரன்வீர் சிங்
|வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று ரன்வீர் சிங் சாமி தரிசனம் செய்துள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். இந்நிலையில், ரன்வீர் சிங்கும் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
அதில், ரன்வீர் சிங் வெள்ளை நிற உடையிலும் கீர்த்தி சனோன் மஞ்சள் நிற உடையிலும் உள்ளனர். இந்நிலையில், இது குறித்து ரன்வீர் சிங் கூறியதாவது,
இந்த நிகழ்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. சிவபெருமானின் பக்தனான நான் முதன்முதலில் இங்கு வந்துள்ளேன். அடுத்த முறை நான் இங்கு வரும்போது என் அம்மாவையும் அழைத்து வருவேன். இவ்வாறு கூறினார்.
கீர்த்தி சனோன் கூறியதாவது,
10 வருடங்களுக்கு முன்பு இங்கு ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக வந்தேன். ஆனால் அப்போது கோவிலுக்கு வர நேரமில்லாமல் போனது. தற்போது அதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இவ்வாறு கூறினார்.