< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'ராஞ்சா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

தினத்தந்தி
|
27 July 2024 4:02 PM IST

பிரஜின் நடிக்கும் ‘ராஞ்சா’ படத்தின் மோஷன் போஸ்டரை மலையாள நடிகர் நிவின் பாலி வெளியிட்டார்.

சென்னை,

விஜேவாக பணிபுரிந்து பின் சின்னத்திரையில் அறிமுகமாகி தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் பிரஜின். 2006-ம் ஆண்டில் இருந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2016-ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை எனும் படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். கடந்த ஆண்டு டி3, அக்கு போன்ற படங்களில் நடித்தார்.

தற்பொழுது 'ராஞ்சா'எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவானா வருண் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முடிந்தது. படத்தை அறிமுக இயக்குனரான சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார்.

சம்பசிவன் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் மற்றும் சிவி குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்தின் மோஷன் போஸ்டரை பிரபல மலையாள நடிகர்களான நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்