இணையத்தில் வைரலாகும் ரன்பீர் கபூரின் பள்ளிப்பருவ புகைப்படம்
|ரன்பீர் கபூரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அனிமல். இப்படத்தில் ரன்பீர் கபூரின் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்தார். அனிமல் படத்தை 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார்.
இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது ரன்பீர் கபூர் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர். கன்னட நடிகர் யஷ் ராவணனாக வருகிறார். மேலும், அனுமனாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ரன்பீர் கபூரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரன்பீர் கபூர், அவரது ஆசிரியர் மற்றும் நண்பருடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தில் இருக்கும் நண்பர் யார்? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.