< Back
சினிமா செய்திகள்
Ranbir Kapoors deleted scene from Animal goes viral, fans react
சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் 'அனிமல்' படத்தின் நீக்கப்பட்ட காட்சி

தினத்தந்தி
|
9 Aug 2024 12:14 PM IST

ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி இருக்கிறது.

சென்னை,

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார்.

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும், இப்படம் வெளியானபோது பலவிதமான விவாதங்களுக்கும் உள்ளானது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் தற்போது பரவி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்