< Back
சினிமா செய்திகள்
ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் பிரபல ஜெர்மானிய இசையமைப்பாளர்
சினிமா செய்திகள்

'ராமாயணம்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் பிரபல ஜெர்மானிய இசையமைப்பாளர்

தினத்தந்தி
|
5 April 2024 1:21 PM IST

ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்துள்ளார்.

மும்பை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். படம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்துள்ளார். இந்த படம் மூலம் இந்திய சினிமாவில் இவர் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். லயன் கிங், இன்டெர்ஸ்டெல்லர், மேன் ஆப் ஸ்டீல், டார்க் நைட் டிரிலாஜி, இன்செப்சன் போன்ற படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகளை வாங்கியுள்ளார். இவர் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். இதன் மூலம் இரண்டு ஆஸ்கார் வெற்றியாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.

முன்னதாக படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வலைதளத்தில் கசிந்து வைரலாகின. அதில் பழங்கால கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் ஏராளமான தூண்கள், மரச்சுவர்கள், கோவில் போன்றவை இருந்தன.

மேலும் செய்திகள்