சாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணம்' படத்தின் புகைப்படங்கள் கசிந்தன
|ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
மும்பை,
நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த ஆண்டு ராமாயணத்தை மையப்படுத்தி உருவான ஆதிபுருஷ் திரைப்படம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. மோசமான இராமாயணத்தை இளம் தலைமுறையினருக்கு கடத்த பார்த்துள்ளதாக பிரபாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ரன்பீர் கபூரை வைத்து ராமாயணம் படத்தை இயக்குனர் நித்திஷ் திவாரி உருவாக்கி வருகிறார். பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தின் மேக்கிங் காட்சிகள் தற்போது கசிந்து தீயாக பரவி வருகிறது.
இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் இவரைப் பார்த்தால் சீதாம்மா போல இல்லை என்றும் சூர்ப்பனகை போல உள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
அனிமல் படத்தில் சைக்கோ தனமான நடிப்பை வெளிப்படுத்தி ஆடையே இல்லாமல் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்த ரன்பீர் கபூர் தற்போது ராமராக மாறியுள்ளார். அவரது லுக்கை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் பிரபாஸின் ஆதிபுருஷ் ராமர் லுக்கிற்கு இது பெட்டர் என பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ராமருக்கு உண்டான ராஜ கலையே ரன்பீருக்கு இல்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்சேதுபதி, யாஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.