< Back
சினிமா செய்திகள்
மாநாடு இந்தி ரீமேக்கில் ராணா
சினிமா செய்திகள்

'மாநாடு' இந்தி ரீமேக்கில் ராணா

தினத்தந்தி
|
15 July 2023 10:41 AM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த 'மாநாடு' படம் பெரிய வெற்றி பெற்று திரையுலகில் புயலை கிளப்பியது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர்.

மாநாடு படத்தின் இந்தி, தெலுங்கு ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு மத்தியில் தெலுங்கு நடிகர் ராணா குடும்பத்தினர் ரூ.12 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டது. சிம்பு வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது. மாநாடு இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 'மாநாடு' படத்தின் இந்தி ரீமேக்கில் ராணா நடிக்க இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரவீன் சத்தா டைரக்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க ரவிதேஜாவிடம் பேசி வருகிறார்கள்.

தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்று தெரியவில்லை. 'மாநாடு' தெலுங்கு, இந்தி ரீமேக் படப்பிடிப்புகளை ஒரே நேரத்தில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்