வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாகுபலி நடிகர்
|வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாகுபலி நடிகர் ராணா டகுபதி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். லைகா புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், வேட்டையன் படத்தில் நடித்து வரும் பாகுபலி நடிகர் ராணா டகுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கல்வித்துறை சார்ந்த குற்றங்கள் செய்யும் தொழில்நுட்பம் தெரிந்த அறிவாளி வில்லனாக இப்படத்தில் நடிக்கிறார்.
வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக வெளியிட்டிருந்தது. அதன்படி, வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என லைகா புரொடக்சன் தெரிவித்துள்ளது.