< Back
சினிமா செய்திகள்
ஆன்மீக பயணத்தில் பிக்பாஸ் நடிகை
சினிமா செய்திகள்

ஆன்மீக பயணத்தில் பிக்பாஸ் நடிகை

தினத்தந்தி
|
11 April 2024 4:17 PM IST

பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் ஆன்மிக பயணம் சென்றிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். பொற்கோயில் முன்பு தங்கசிலையாக நின்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்க ரசிகர்கள் ஹார்ட்டின் பறக்க விட்டு வருகின்றனர்.

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. சூர்யா தயாரித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், இன்ஸ்டாவிலும் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

நடிகை ரம்யாபாண்டியன் அம்மா, அக்கா, தம்பியோடு பஞ்சாப் பொற்கோயிலுக்கு ஆன்மிக பயணம் சென்றிருக்கிறார். ஆன்மிக பயணம் செல்வதில் ஆர்வம் கொண்ட ரம்யா பாண்டியன் சமீப காலமாகவே அதில் அதிக நாட்டம் செலுத்துகிறார். ரிஷிகேஷ், இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளுக்கு சமீபத்தில் பயணப்பட்டவர் தற்போது பஞ்சாப் அமிர்தசரஸில் இருக்கும் பொற்கோயிலுக்கு சென்றிருக்கிறார்.

இவரது கைவசம் 'இடும்பன்காரி' என்ற படம் மட்டுமே உள்ளது. இதுதவிர நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆன்மிக பயணம் கிளம்பி விடுகிறார் ரம்யா.பஞ்சாப் பொற்கோயில் முன்பு தங்கசிலையாக நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் செய்திகள்