வைரலாகும் ரம்யா பாண்டியனின் ஹோலி கொண்டாட்டம்
|நாயகியாக வலம் வரும் ரம்யா பாண்டியன், வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை கொண்டாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.
டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது.
சூர்யா தயாரித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், இன்ஸ்டாவிலும் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
அந்த வகையில், தற்போது ஹோலி கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். மஞ்சள் நிற உடை அணிந்து, கையில் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.
ரம்யா பாண்டியனின் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.